ஒரே நாளில் 3; எங்க குடும்பம் ஒரு... பிரபல நடிகர் ஆர்.ஜே பாலாஜி கூறியதை பார்த்தீங்களா!!

ஒரே நாளில் 3; எங்க குடும்பம் ஒரு... பிரபல நடிகர் ஆர்.ஜே பாலாஜி கூறியதை பார்த்தீங்களா!!


rj-balaji-talk-about-her-family

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி நடிகராக கலக்கி மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. அதனைத் தொடர்ந்து அவர் எல்கேஜி படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை கொடுத்தார். இப்படமும் மாபெரும் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து அவர் வீட்ல விசேஷங்க என்ற படத்தை இயக்கி அதில் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படம் 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ என்ற காமெடி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
 
இந்த நிலையில் சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி பேட்டி ஒன்றில் பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அப்பொழுது அவர் எங்கள் குடும்பம் ஒரு சினிமா பைத்தியம். ஒரே நாளில் 3 படம் பார்ப்போம். எங்க அம்மா தான் எங்களை  அழைத்துச் செல்வார்.
பொதுவாக தீபாவளிக்கு அம்மா குளிக்க வைத்து புது டிரஸ் போட்டு ஸ்வீட் செய்து தருவார்கள்.

ஆனால் எனது அம்மா உதயம் தியேட்டருக்கு கூட்டிட்டு போவாங்க. அவ்வாறு ஒரு தடவை சென்று 10.30 மணிக்கு தளபதி படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே உடனே குணா படத்திற்கு சென்றோம். பின் 2 மணிக்கு தளபதி படத்திற்கு டிக்கெட் வாங்கி பார்த்தோம். ஆறு மணிக்கு சின்ன கவுண்டர் பார்த்தோம் என ஆர்ஜே பாலாஜி கலகலப்பாக கூறியுள்ளார்.