சினிமா

கவினுக்கு இவ்வளவு மோசமான விருதா? ரியோ செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள்!!

Summary:

Riyo gave villan award to kavin

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மூன்று மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றநிலையில்  முகேன் பிக்பாஸ் பட்டத்தை வென்றார்.அவரை தொடர்ந்து சாண்டி இரண்டாவது இடத்தையும், லாஸ்லியா மற்றும் ஷெரின் மூன்று மற்றும் நான்காவது இடத்தையும் பெற்றார். 

 அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிக்பாஸ் நண்பர்கள் ஒன்றாக நேரத்தை செலவிட்டு வந்தனர். மேலும் விஜய் 
 தொலைக்காட்சியிலும் ரியோ ராஜ் மற்றும் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றிலும் தங்களுக்கே உரிய கலகலப்பான குணத்துடன் கலந்து கொண்டு பார்வையாளர்களை ரசிக்க வைத்தனர்.

 இந்நிலையில் பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ரியோ பிக்பாஸ் போட்டியாளர்களான முகேன், தர்ஷன் கவின் மற்றும் சாண்டி ஆகியோருக்கு  சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களின் உருவ பொம்மையை விருதாக அளித்துள்ளார். அதில் வெற்றியாளர் முகேனுக்கு ரெயின்போ ராக்கி பொம்மையையும், தர்சனுக்கு கேப்டன் அமெரிக்கா பொம்மையும் விருதாக வழங்கியுள்ளார். மேலும் கவினுக்கு அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரமான லோகின் உருவபொம்மையையும், சாண்டிக்கு டெட் பூல் என்ற விருதையும் வழங்கியுள்ளார்.


 இந்நிலையில் அனைவருக்கும் ஹீரோ கதாபாத்திரத்தின் உருவ பொம்மையையும், கவினுக்கு மட்டும் வில்லன் உருவ பொம்மையையும் வழங்கியதை கண்டு கவின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். மேலும் மோசமான விமர்சனங்களையும் கூறி வருகின்றனர். ஆனால்  அதனை கவின் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.

 


Advertisement