சினிமா

அடேங்கப்பா! நடிகர் விஜய்யுடன் இருக்கும் பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி! யார்னு பார்த்தீர்களா! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!

Summary:

பிக்பாஸ் ரியோவின் மனைவி ஸ்ருதி, நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் நான்கில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகர் ரியோ ராஜ். தொகுப்பாளராக இருந்த அவர் அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியின் பல வெற்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதனைத் தொடர்ந்து  ரியோ பாணா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையிலேயே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மக்களுக்கு மிகவும் பிடித்தவராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அவர் நாளடைவில் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார்.

ரியோவின் மனைவி ஸ்ருதி. காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் அழகிய பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் ரியோவின் மனைவி ஸ்ருதி நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றது. 


Advertisement