என் கணவர் ரியோ ஒரு கோமாளிதான்.. அவர் அப்படியே இருந்துட்டு போகட்டும்.. விட்ருங்க.. கதறும் ரியோவின் மனைவி..

என் கணவர் ரியோ ஒரு கோமாளிதான்.. அவர் அப்படியே இருந்துட்டு போகட்டும்.. விட்ருங்க.. கதறும் ரியோவின் மனைவி..


Rio wife cool comment to fan who scold rio

தனது கணவர் குறித்து ரசிகர் ஒருவர் பதிவிட்ட கமெண்ட்டிற்கு நடிகர் ரியோவின் மனைவி கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பிரபலமானவர்தான் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரிலும் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.

Riyo

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் சென்ற இவர் சமீபத்தில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் சொல்லும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோ ஆகவேண்டும் என்ற கனவுடன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடிவருகிறார் ரியோ.

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து சண்டை, சச்சரவு என தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தி வருகிறார் ரியோ. இதனால் சமூக வலைத்தளங்களில் ரியோ மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் ரசிகர் ஒருவர், ரியோ ராஜின் மனைவியிடம் உங்கள் கணவர் கோமாளியாக செயல்படுகிறார் என கேள்வி எழுப்பி உள்ளார்.

Riyo

இதற்கு கூலாக பதிலளித்துள்ள ரியோ மனைவி, "எனது கணவரை கோமலி என்று கூறி அவதூறு செய்ய முயற்சிக்கும் சில கருத்துகளை நான் காண்கிறேன். நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன்! தனது வலியை மறைக்கும்போது கூட மற்றவர்களை சிரிக்க வைக்க தன்னால் முடிந்தவரை நேசிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்! நீங்கள் வெறுப்புக்கு அப்பால் பிரகாசிக்கிறீர்கள் என் அன்பே! ஒரு கோமலியாக இருங்கள். ஒரு உத்வேகமாக இருங்கள்!" என பதிவிட்டுள்ளார் ரியோ மனைவி.