சினிமா

அட..சொன்னதை செஞ்சுட்டாரே.! பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரியோ செய்த காரியத்தை பார்த்தீர்களா!

Summary:

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரியோ காட்டிற்குள் டிரேக்கிங் சென்றுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்ற நிலையில் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி நிறைவுக்கு வந்தது. இதில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவருக்கு பரிசுத் தொகையாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் பாலா இரண்டாவது இடத்தையும், ரியோ ராஜ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

பிரபல தொகுப்பாளராக இருந்து பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான ரியோ நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் பின்னரே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது, வெளியே சென்றதும் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு, தூங்கிய பிறகு ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு காட்டிற்குள் ட்ரெக்கிங் செல்ல வேண்டும் என கூறி வந்தார். மேலும் இறுதிப் போட்டிக்கு வந்த போட்டியாளர்களுக்கு கமல் பரிசு கொடுத்த போது ரியோவிற்கு டென்ட்டை பரிசாக கொடுத்து இருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரியோ தற்போது ட்ரக்கிங் சென்றுள்ளார். அதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து மற்றொரு உலகத்திற்கு என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement