கோலாகலமாக நடந்த ரியோவின் பிறந்தநாள் கொண்டாட்டம்! பார்ட்டிக்கு யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீர்களா!!

பிரபல தொகுப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில்


rio-birthday-party-celebraion-with-bigboss-contestants

பிரபல தொகுப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ரியோ. அதனை தொடர்ந்து அவர் சிவகார்த்திக்கேயன் தயாரிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதனை தொடர்ந்து அவர்  பத்ரி இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் ரியோ சில மாதங்களுக்கு முன் தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யத்துடன் சென்ற  பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அனைத்து டாஸ்குகளையும் சிறப்பாக செய்து  நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற அவர் மூன்றாவது இடத்தை பெற்றார். பின்னர் பிக்பாஸ் 4ல் இருந்து வெளியில் வந்த பிறகு அவர் மனைவி மற்றும் குழந்தையுடன் காட்டுப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

இந்நிலையில் இன்று ரியோவிற்கு பிறந்தநாள். அதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். மேலும் ரியோ தனது நண்பர்கள் மற்றும் பிக்பாஸ் பிரபலங்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதில் அந்த பார்ட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, அர்ச்சனா, ஆஜித், பாலா, ஷிவானி, சோம், கேப்ரில்லா உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.