பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த இரு இளம்நாயகிகள்! வெட்கத்தில் மூழ்கிய கவின்!! கலக்கல் வீடியோ இதோ..

ridvika,janani iyar came to bigboss house


ridvikajanani-iyar-came-to-bigboss-house

பிக்பாஸ் சீசன்மூன்று கமல்ஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்க 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்திற்கு சில வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.
 
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது இறுதிக்கட்ட போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், ஆகியோர் மட்டுமே கடினமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் மிகவும் கடுமையான டாஸ்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ்.அதனையும் மீறி பிக்பாஸ் பட்டத்தை வெல்ல அனைவரும் முழு மூச்சுடன் போராடி வருகின்றனர். 

janani iyar

இந்நிலையில் பட ப்ரமோஷன் மற்றும் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக நேற்று பிக்பாஸ், சீசன் 2  போட்டியாளர்களாக மஹத் மற்றும் யாஷிகாவை பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக அழைத்து வந்தனர். அவர்களை கண்ட ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர். மேலும் நேற்று இதனால் பிக்பாஸ் வீடே கலகலப்பானது.

அதனை தொடர்ந்து இன்றும் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் இரு இளம்நடிகைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தரவுள்ளனர். அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் பிக்பாஸ் சீசன் 2  போட்டியாளர் மற்றும் வின்னர் ஜனனி ஐயர் மற்றும் ரித்விகா ஆகியோர் வருகை தந்துள்ளனர். அவர்களை கண்டதும் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் வந்ததும் வீடே ரணகளமாகியுள்ளது. இந்த பிரமோ வீடியோ வெளியாகி வைரலாகி  வருகிறது.