சினிமா

இந்தியாவிலேயே முதல்முறையாக, தல படத்திற்கு மட்டும் இப்படியொரு ஸ்பெஷலா? வெளியான மாஸ் தகவல்!!

Summary:

rgb laser used in nerkonda parvai movie

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை க்கான பட முடிவு

மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து படம் ஆகஸ்ட் 8 ல் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது. அதனால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்திற்காக இந்தியாவில் முதன்முறையாக ஆர்ஜிபி லேசர் வசதி கொண்ட புரொஜக்டரை பிரபல திரையரங்கம் ஒன்று நிறுவியுள்ளது.மேலும் இதுகுறித்த தகவலை குறிப்பிட்ட திரையரங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் உற்சாகத்துடன் வெளியிட்டுள்ளது.இந்நிலையில் ரசிகர்கள் ஆர்ஜிபி லேசர் வசதி கொண்ட புரொஜக்ரின் முலம் படத்தை காண பெரும் ஆர்வத்தில் உள்ளனர். 


Advertisement