சொந்தக்காசில் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவன், மொக்கையாக இருந்தால் விமர்சனம் செய்வான் தான் - புளூசட்டை மாறனின் காட்டமான பதிவு.!

சொந்தக்காசில் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவன், மொக்கையாக இருந்தால் விமர்சனம் செய்வான் தான் - புளூசட்டை மாறனின் காட்டமான பதிவு.!



Reviewer Blue Sattai Maran about Everyone have Reviewer Statement by Samuthirakani 

 

தமிழ் மொழியில் வெளியாகும் திரைப்படங்களில் உள்ள கருத்துக்கள், படத்தின் தரம், இசை, திரைக்கதை, வசனங்கள் உட்பட பல காரணிகளை ஆராய்ந்து கருத்து கூறும் விமர்சகர்களின் பிரபலமானவர் புளூசட்டை மாறன் என்ற இளமாறன். 

திரையில் வெளியாகும் படங்களில் மொக்கையாக உள்ள திரைப்படங்களை பாரபட்சமின்றி வெளுத்துவாங்குவதும், நல்ல தரமான படங்களை பாராட்டுவதும் இவரின் இயல்பு. இதனால் அவர் சண்டை செய்யாத திரை நடிகர்களின் ரசிகர்கள் கூட்டமே இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. 

இதனிடையே, அவ்வப்போது சில திரைப்படங்களில் இவரை உவமைப்படுத்தி கலாய்க்கும் காட்சிகளும் வெளியாகும். இன்றளவில் பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளபக்கங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து நடிகர் சமுத்திரக்கனியும் தனது கருத்தினை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் இளமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், "பணம் தந்துதானே படம் பார்க்கிறார்கள்? அதனால் விமர்சனம் செய்கிறார்கள். சொம்பு அடித்து பாராட்ட நீங்கள் இலவச டிக்கட்டா தருகிறீர்கள்? டீக்கடையில் வாங்கும் பத்து ரூபாய் பஜ்ஜி முதல் பல ஆயிரம் மதிப்புள்ள ஆடை வரை.. குறை இருந்தால் சுட்டிக்காட்டுவது நுகர்வோரின் உரிமை.

குப்பை படம் பார்த்து நேரம் மற்றும் பணத்தை செலவழிப்பவர்.. துப்பாமல் என்ன செய்வார்? கேமரா முன்னால் நிற்பவன், டப்பிங் பேச வாய் இருப்பவனெல்லாம்.. நடிப்பு பயிற்சியே இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும்போது..

தன் உழைப்பில் செல்போன் வாங்கி, தனது பணத்தில் டிக்கட் எடுப்பவர்.. விமர்சனம் செய்தால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது தெரியுமா? சமூக வலைத்தளத்தில் தனித்து இயங்கி.. வெளிப்படையாக விமர்சனம் செய்வோர் சிலரை உங்களால் விலைக்கு வாங்கவே முடியாது என்பதால்.

ஆகவே.. இந்த நக்கல் வெங்காயமெல்லாம் வேலைக்கு ஆகாது சார். நீங்கள் உங்கள் வேலையை உருப்படியாக பாருங்கள். மொக்கை படங்கள் தொடர்ந்து விமர்சனங்களில் கிழித்து தொங்க விடப்படும்" என கூறியுள்ளார்.