பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்தபிறகு என்ன நடக்கும்? உண்மையை போட்டுடைத்த ரேஷ்மா!!reshma talk about bigboss

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பாத்திமா பாபு எலிமினேட் செய்யபட்டப்பட்டார். அதனை தொடர்ந்து தனது பேச்சாலும், சண்டைகளாலும் பிக்பாஸ் வீட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்திவந்த வனிதா  வெளியேறினார். 

Reshma

அதனை தொடர்ந்து மூன்றாவதாக மோகன் வைத்யா மற்றும் அடுத்ததாக மீராமீதுன் ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் கடந்த வாரம் ரேஷ்மா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்த இவர் விமான பணிப்பெண்ணாக  பணிபுரிந்து வந்தார்.மேலும் தனது வாழ்வில் பல இன்னல்களையும் துயரங்களையும் சந்தித்துள்ளார். 

Reshma

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரேஷ்மா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அப்பொழுது வீட்டில் இரவில் லைட் ஆப் செய்தபிறகு என்ன நடக்கும் என கேட்டதற்கு, அவர் நானும், மற்ற போட்டியாளர்களும் வேலைகளை தூங்க சென்றுவிடுவோம்.

ஆனால், கவின், லாஸ்லியா, சாக்‌ஷி, அபிராமி, மெக்கேன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சத்தமாக சிரித்து பேசுவார்கள் . ஜாலியாக பாட்டு பாடிஇரவு பொழுதை கழிப்பார்கள். பின்னர் மறுநாள் பகலில் தூக்கம் வருவதாக புலம்புவார்கள் என கூறியுள்ளார்.