சினிமா பிக்பாஸ்

வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்த கவின் எடுத்த அதிரடி முடிவு.! ஆதரவாக குரல் கொடுத்த பிரபலம்!!

Summary:

reshma support to kavin

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் நிகழ்ச்சியின் இறுதி நிலைக்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல போவது யார் என அறிந்துகொள்ள பார்வையாளர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 5  போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நாளுக்கு நாள் மிகவும் கடினமான டாஸ்க்குகளை கொடுத்து வந்தாலும் போட்டியாளர்கள் அதனை முழுஆர்வத்துடன் செய்துவருகின்றனர். 

Bigg Boss 3 - 25th September 2019 | Promo 3 க்கான பட முடிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளையும் பிரச்சினைகளையும் சந்தித்தாலும் மிகவும் கலகலப்புடன் விளையாடி வந்தவர் கவின். இவர் பிக்பாஸ் 5 லட்சம் கொடுத்து யாருக்காவது வெளியேற விருப்பமா என கேட்டபோது, கவின் அதற்கு ஒப்புக்கொண்டார். மேலும் போட்டியாளர்கள் பலரும் அவரை தடுத்தபோதும், அவர் பிடிவாதமாக வீட்டை விட்டு வெளியேறினார். அதனால் அனைவரும் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

இந்நிலையில் இந்த சீசனில் பங்கேற்ற மற்றொரு போட்டியாளர் ரேஷ்மா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவினுக்கு ஆதரவாக, எங்கள் நட்பை நான் என்றுமே போற்றுவேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சரியானதைசெய்துள்ளீர்கள். உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் ஆதரவாக இருப்பேன்.வெற்றி உங்களுடையது. இனி கண்ணீர் இல்லை சகோதரரே எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் என கூறியுள்ளார்.


Advertisement