தலயின் 60வது படத்தில் நடிக்கவுள்ளாரா இந்த பிக்பாஸ் சீசன்3 பிரபலம்.! வெளியான புதிய தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!!

தலயின் 60வது படத்தில் நடிக்கவுள்ளாரா இந்த பிக்பாஸ் சீசன்3 பிரபலம்.! வெளியான புதிய தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!!



reshma-going-to-act-with-thala-60

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து  முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி  உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருவர்.

இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையும் குவிகிறது. 

Ajith Kumar

மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தை தொடர்ந்து அஜித்துக்கு பெண் ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து அஜித்தின் 60வது படத்தையும் இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார். இப்படத்தை வினோத் டார்க் மோடில் இயக்கவுள்ளதாகவும், அதில்  நடிகர் அஜித் ஒரு ரேசிங் வீரராக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

Ajith Kumar

இந்நிலையில், இந்த மாஸ் படத்தில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரேஷ்மா சிறுகதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.