வனிதாவை எப்போ குடும்பத்துல சேத்துக்க போறீங்க! அருண் விஜய்யிடம் நிருபர் கேட்ட கேள்வி! அவரோட பதில் என்ன??

வனிதாவை எப்போ குடும்பத்துல சேத்துக்க போறீங்க! அருண் விஜய்யிடம் நிருபர் கேட்ட கேள்வி! அவரோட பதில் என்ன??


reporter-ask-to-arunvijay-about-joining-vanitha-with-fa

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அருண்விஜய். அவர் தற்போது ஹரி இயக்கத்தில் உருவான யானை படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் வைத்துள்ளார். மேலும் இவர்களுடன் சமுத்திரகனி, போஸ் வெங்கட், சஞ்சீவ், யோகிபாபு, ராதிகா சரத்குமார், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ்  இசையமைத்திருக்கிறார். குடும்ப ஒற்றுமை, அண்ணன்கள்- தம்பியின் பாசக் கதையை மையமாக கொண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை காண இயக்குனர் ஹரியும், நடிகர் அருண் விஜய்யும் தியேட்டரில் விசிட் அடித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

arunvijay

அப்பொழுது, படத்தில் குடும்பத்தை விட்டு கொடுக்ககூடாது, ஒற்றுமையா இருக்கணும்னு காமிச்சுருக்கீங்க, ஆனால் உங்க குடும்பத்திலேயே ஒருத்தர் தனியா இருக்கார். அவங்கள எப்ப நீங்க சேத்துக்க போறீங்க’ என வனிதா குறித்து கேட்டுள்ளார். அதற்கு அருண் விஜய்யும், ஹரியும் பதில் சொல்லாமல் சிரித்தபடி இருந்துள்ளனர். பின்னர் உடனே அருகிலிருந்த ஒருவர், இது படத்த பற்றிய பேட்டி. அதனால் படத்தை பத்தி மட்டும் பேசுங்க என கூறியுள்ளார். அதற்கு அருண் விஜய்யும் ‘ஹ்ம்ம்’ என்று தலையாட்டியுள்ளார்.