நடிகை தனுஷை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த சர்ச்சைக்குரிய நடிகை..

நடிகை தனுஷை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த சர்ச்சைக்குரிய நடிகை..


Rekha nair wants to marry danush

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் ரேகா நாயர். இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிதளவில் கை கொடுக்கவில்லை.

Dhanush

சமீபத்தில் பார்த்திபன் இயக்கிய 'இரவின் நிழல்' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அரை நிர்வாணமாக நடித்தவர் மிகவும் பிரபலமானார். மேலும் இந்த காட்சி குறித்து பத்திரிகையாளர் பயில்வான் விமர்சித்தார்.

இதற்காக நடுரோட்டில் வைத்து அவரிடம் சண்டையிட்டு வீடியோ எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு வந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.

Dhanush

சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட ரேகா நாயர், "எனக்கு தனுஷ் தான் ரொம்ப பிடிக்கும். அவருக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அவரையே கல்யாணம் பண்ணி இருப்பேன். இதை நான் அவர்கிட்ட சொல்லி இருக்கேன்" என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.