சினிமா

சர்க்கார் படத்திற்கு ரெட் கார்ட்? தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல்!

Summary:

Red card for sarkar movie

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 
உருவாகிவரும் சர்க்கார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.  கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்னர். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்கினார் சர்க்கார் படத்தின் கதை என்டைது என நீந்திமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நாளை (அக்.30) நடைபெறவுள்ளது. இதனிடையில், தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பாக்கியராஜ் ‘செங்கோல்-சர்கார்’ இருபடத்தின் கதையும் ஒன்றுதான் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் என்பவர் ‘சர்கார்’ படத்திற்கு ரெட் கார்ட் போட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷாலிடம் மனு கொடுத்துள்ளார்.

அதில், தான் இயக்கிய ‘தாகபூமி’ எனும் குறும்படத்தின் கதையை திருடி தான் ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தை இயக்கினார். இதனால் ‘சர்கார்’ படத்திற்கு ரெட் கார்ட் வழங்குமாறு மனு அளித்துள்ளார்.

விஜயின் ‘சர்கார்’ படம் ரிலீசாவதற்கு தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருவதால், ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Advertisement