என்கிட்ட வச்சிக்காத., உன் பிளான் நல்லா தெரியும் - ரவீந்தருக்கு வனிதா பதிலடி..! எதுவும் உள்குத்து இருக்கோ..!!

என்கிட்ட வச்சிக்காத., உன் பிளான் நல்லா தெரியும் - ரவீந்தருக்கு வனிதா பதிலடி..! எதுவும் உள்குத்து இருக்கோ..!!



ravindar-mahalatsumi-marriage-vanitha-says-about-ravind

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தரும், நடிகை மகாலட்சுமியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். திருமணத்திற்கு பின்னர் புதுமண ஜோடி பல யூடியூப் நிறுவனங்களுக்கு தங்களின் மீதான சர்ச்சை குறித்து பதிலளிக்கும் வகையில் பேட்டி அளித்து வருகின்றனர். 

ரவீந்தர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்து வழங்கியிருந்தாலும், இவரை தயாரிப்பாளராக விட பிக்பாஸ் விமர்சனராக தான் பலருக்கும் தெரியும். பிக்பாஸ் 4-வது சீசனில் வனிதா - பீட்டர்பால் திருமண சர்ச்சை காரணமாக வனிதாவிற்கும் ரவீந்தருக்கும் பயங்கர சண்டை ஏற்பட்டது.

Vanitha vijayakumar

இந்த விஷயம் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு ரவீந்தர் அளித்த பதிலாவது, "திருமணத்திற்கு பின் பலரும் மகாலட்சுமி இரண்டாம் திருமணம் செய்தவிட்டார் என்று கூறுகின்றனர். அது தொடர்பான தலைப்புகளே செய்திகளாக வெளி வருகிறது. ஆனால் உண்மையில் எனக்கும் இது இரண்டாவது திருமணம் தான். எனக்கு திருமணம் முடிந்த விஷயம் வனிதாவிற்கு கட்டாயம் தெரிந்திருக்கும்.

நாங்கள் சுமூகமான உறவில் இருந்திருந்தால் அவர் எனக்கு வாழ்த்துக்களை சொல்லியிருப்பார்" என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள வனிதா, "பிறரின் வாழ்க்கையை பற்றி கவலைப்பட இயலாத அளவிற்கு நான் மகிழ்ச்சியாகவும், பிசியாகவும் இருந்து வருகிறேன். கர்மா என்பது யாரையும் சும்மா விடாது. அதற்கு திருப்பிக் கொடுக்கும் வகை தெரியும். நான் அதனை முழுமையாக நம்புகிறேன்" என்று ட்வீட் பதிவு செய்திருந்தார். 

Vanitha vijayakumar

இந்த நிலையில் வனிதா அளித்துள்ள பேட்டியில், "நான் பதிவு செய்த ட்வீட்டில் பல சர்ச்சை எழுந்துள்ளது. உண்மையில் நான் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன். அதனை எதார்த்தமாக பதிவு செய்தது மடைமாற்றப்பட்டுள்ளது. நான் யாரையும் குறிப்பிடவில்லை. அது அவர்களுக்கு தொடர்புள்ளதாக மாறியுள்ளது. கர்மா யாரையும் சும்மா விடாது என்பது நான் எனது வாழ்க்கையில் நிறைய பார்த்து விட்டேன். 

என்றைக்கும் ஒரு விஷயத்தை நாம் செய்யும்போது அது மற்றவர்களை பாதிப்பது குறித்து யோசிப்பதில்லை. தேவையில்லாமல் இன்னொருவரின் வாழ்க்கையில் தலையிடக்கூடாது. அவரவரின் வாழ்க்கையை அவரவர்களுக்கு வாழ தெரியும். நாம் எதிர்க்கட்சி வக்கீல் கிடையாது. பப்ளிசிட்டிக்காக ஒரு விஷயத்தை பலரும் மாற்றி கூறுகிறார்கள். அரசியலில் இதெல்லாம் சாதாரணம். ரவீந்திரனின் மாஸ்டர் பிளான் என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும். என்னிடம் வைத்துக் கொள்ள வேண்டாம்" என்று பேசியுள்ளார்.