"என் கணவருக்கு ஏ கிளாஸ் ஜெயில் தான் வேண்டும்" அடம் பிடிக்கும் ரவீந்திரன் மனைவி..

"என் கணவருக்கு ஏ கிளாஸ் ஜெயில் தான் வேண்டும்" அடம் பிடிக்கும் ரவீந்திரன் மனைவி..


Raveendran arrested for cheating case update

தயாரிப்பாளரும், இயக்குனருமான ரவீந்தருக்கு அவரது காதல் மனைவி மகாலட்சுமி சிறையில் ஏ கிளாஸ் சிறை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 2019 ஆம் ஆண்டு 'சொல்ல மறந்த கதை' என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது ரவீந்தருடன் பழக்கமாகி அது காதலாகியது.

Ravindran

அவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது திருமணம் தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாகியது. இவர்கள் யூ ட்யுப், இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் அதன் பிறகு மிகவும் பிரபலமாகினர்.

இதற்கிடையே தயாரிப்பாளர் ரவீந்தரின் மீது கடந்த ஆண்டு பாலாஜி என்ற நபர் வழக்கினை தொடுத்தார். அந்த வழக்கில் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் ப்ராஜெக்ட் நடத்த இருப்பதாக கூறி 16 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டதாக வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் ரவீந்த்ரன் கைதாகி சிறையில் உள்ளார்.

Ravindran

இவர் சிறையில் உள்ள நிலையில் இவரது மனைவி மகாலட்சுமி இவரது உடல்நிலை கருதி ஜாமினில் விடுவிக்க வேண்டும் எனவும், மேலும் சிறையில் இருக்கும் இவருக்கு ஏ கிளாஸ் வழங்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு

மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.