என்னது.. கன்னித்தீவுக்கு போறாங்களா?? விளக்கமளித்த ட்ரெண்டிங் ஜோடி ரவீந்தர்- மஹாலட்சுமி!!

என்னது.. கன்னித்தீவுக்கு போறாங்களா?? விளக்கமளித்த ட்ரெண்டிங் ஜோடி ரவீந்தர்- மஹாலட்சுமி!!


Raveendar mahalakshmi talk about kannitheevu trip

தமிழ் திரையுலகில் பலரது திருமணங்கள் பெருமளவில் ட்ரெண்டாகி பரபரப்பாக பேசப்படும். அவ்வாறு சமீபத்தில் சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை மகாலட்சுமிக்கும், திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர்க்கும் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் அவர்கள் இருவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. திருமணம் முடிந்த கையோடு அவர்கள் பல பேட்டிகளை கொடுத்தும் வருகின்றனர். இந்நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் கன்னித்தீவு செல்லவிருப்பதாக தகவல்கள் பரவியது.

Raveendar

இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியளித்த ரவீந்தர், தான் கன்னித்தீவிற்கெல்லாம் செல்லவில்லை. நாங்கள் டால்மியாபுரத்தில் உள்ள எனது குலதெய்வம் கோவிலுக்கு சென்றோம். தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும் எங்களது திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது ஆச்சரியமாக உள்ளது. செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுலகில் பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய நிறுவனம் அதில் பெறாத வருமானத்தை எங்களது திருமணம் மூலம் பெற்றுள்ளது எனக் கூறியுள்ளார்.