மகா அதை கொண்டு வரலைனா.. மாமியார் கொடுமை கன்பார்ம்.! அச்சோ.. என்ன ரவீந்தர் இப்படி சொல்லிட்டாரே!!



Raveendar became a food delievery boy to mahalakshmi

சின்னத்திரையில் ஏராளமான தொடர்களில் ஹீரோயின், வில்லி என பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் மகாலட்சுமி. இவர் தயாரிப்பாளர் ரவீந்தரரை சில காலங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர்களது திருமணமே இணையதளத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

மேலும் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தொடர்ந்து பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இருவரும் ஒன்றாகவிருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அவர் நேற்று மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்துடன் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், ஞாயிற்றுக்கிழமையை ஃபேமிலி டைம் என்பார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு அப்படி இல்லை. இன்று எனக்கு ஷூட்டிங் என கூறி அதிகாலையிலேயே மகாலட்சுமி கிளம்பி சென்றுவிட்டார்.நான் இன்று மகாலட்சுமிக்காக டன்ஸோ பாயாக மாறி அன்பே வா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சாப்பாடு எடுத்துச் சென்றேன்.

 என் பொண்டாட்டிக்காக புரட்டாசி 1 அருமையான சைவ உணவு சமைத்து கொடுத்த என் அம்மாவுக்கு நன்றி எனக் கூறியுள்ளார். மேலும் அவர் பொண்டாட்டி மகாலட்சுமி ஷங்கர் எல்லா பாத்திரத்தையும் பத்திரமாக வீட்டுக்கு கொண்டு வந்துடு. இல்லைனா மாமியார் கொடுமை மட்டும் அல்ல. என் அம்மா என்னை டன்ஸோவில் சேர்த்துவிடுவார் என கூறியுள்ளார்.அது வைரலாகி வருகிறது.