சினிமா

புதிய அவதாரம் எடுக்கும் நடிகை ராதிகா! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Summary:

Rathika new game sho

80 களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ராதிகா. இவர் ரஜினி, கமல், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு இவர் முன்னணி நடிகரான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

அதனை தொடர்ந்து சித்தி என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இரவு 9.30 வரும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மனதில் இன்னும் நீங்கா இடம் பிடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கலர்தமிழ் டிவியில் புதிய கேம் ஷோ ஒன்றை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியின் ப்ரீ-புரோடக்சன் வேலைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த மாதிரி ஒரு ஷோ ஒரு பெண் முதன் முதலாக தொகுத்து வழங்குவது இதுவாக தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.


Advertisement