பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது மட்டும் தான் இருக்கிறது.! கடுமையாக விமர்சித்த பிரபல நடிகை.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது மட்டும் தான் இருக்கிறது.! கடுமையாக விமர்சித்த பிரபல நடிகை.!


rathiga-about-biggboss

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை ஒரு காலத்தில் கட்டி போட்டவர் நடிகை ராதிகா. வெள்ளித்திரையை கடந்து சின்னத்திரையிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார் நடிகை ராதிகா.

biggboss

இவர் நடிப்பில் வெளியான செல்லமே, அண்ணாமலை, சித்தி உள்ளிட்ட நெடுந்தொடர்களை கொண்டாடாத பெண்களே கிடையாது என்று சொல்லலாம். சன் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக நெடுந்தொடர்களை தயாரித்தும், நடித்தும் வந்த ராதிகா தற்போது விஜய் தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் என்ற தொடரை தயாரித்து வருகிறார்.

biggboss

இந்நிலையில் தான், நடிகை ராதிகா அண்மையில் வேலூரிலுள்ள நாராயணி மருத்துவமனை சார்பாக நடந்த உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தின விழாவில் பங்கேற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன இருக்கிறது என்று பார்த்தால், ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார்கள் அதுதான் உள்ளது. இளம்பெண்கள் போனிலேயே மூழ்கிக் கிடக்காமலிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.