தளபதி 66 படத்தின் ஹீரோயின் இவர்தானா! பிறந்தநாளில் வெளிவந்த சூப்பர் தகவல்! செம உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தளபதி 66 படத்தின் ஹீரோயின் இவர்தானா! பிறந்தநாளில் வெளிவந்த சூப்பர் தகவல்! செம உற்சாகத்தில் ரசிகர்கள்!!



rashmika-mandanna-is-a-heroine-in-thalapathy-66-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படம் வெளியாவதற்காக பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தோழா போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தளபதி 66 என பெயரிடப்பட்டுள்ள அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

தளபதி 66 படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இந்நிலையில் அப்படத்தில் ஹீரோயினாக, விஜய்க்கு ஜோடியாக நடிக்கபோவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது 'தளபதி 66' படத்தின் ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தெலுங்கு சினிமாவில் தற்போது ஏராளமான படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.