சினிமா

பிரமாண்ட இயக்குனரின் படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா! யாருக்கு ஜோடியாக தெரியுமா? வேற லெவல்தான்!!

Summary:

 கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுலகில் அறிமுகம

 கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.  அதனை தொடர்ந்து அவர் தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் என்ற பாடல் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. பின்னர் ஏராளமான பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கியது.

மேலும் ராஷ்மிகா தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் அறிமுகமாகவுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ளது. ஆனால் இவரது படம் வெளியாவதற்கு முன்பே இவருக்கென ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். மேலும் ராஷ்மிகா பாலிவுட்டிலும் இரு படங்களில் நடிக்க உள்ளார்.

 தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் அரசியல் திரில்லரை அடிப்படையாக கொண்ட புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  அப்படத்தில் அவர் முன்னணி நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

 


Advertisement