கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் வரை பல படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா மந்தனா.. மேடம் எப்பவுமே பிசிதான் போல?..!!Rashmika busy with more movies

 

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். அத்துடன் ரசிகர்கள் இவரை அன்புடன் நேஷனல் கிரஷ் என்று அழைப்பர்.

Rashmika mandhana

அத்துடன் தற்போது தமிழில் தளபதி விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பிசியாக படங்களை கைவசம் வைத்துள்ளார். 

Rashmika mandhana

தமிழில் கார்த்தியுடன் ஜப்பான், தெலுங்கில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, ஹிந்தி மொழியில் சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மேடம் எப்பவுமே பிசிதான் போல? என்று கூறிவருகின்றனர்.