பாய் பிரண்ட் யார்? மனம்திறந்து உண்மையை உடைத்த நடிகை ராஷி கண்ணா!

பாய் பிரண்ட் யார்? மனம்திறந்து உண்மையை உடைத்த நடிகை ராஷி கண்ணா!



rashi-khanna-talk-about-her-boy-friend

ஹிந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் நடிகை ராஷி கண்ணா தமிழில் 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அவர் அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பல மொழிகளிலும் நடித்து பிஸியாக இருக்கும் நடிகை ராஷி கண்ணா சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்க கூடியவர்.

இந்நிலையில் அவர் அண்மையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது பல கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கோலிவுட்டில் தனக்கு விருப்பமான நடிகர் விஜய், பிடித்த நடிகை நயன்தாரா என பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்பொழுது ரசிகர் ஒருவர்  உங்களுடைய பாய் பிரண்ட் பெயர் என்ன? என்று கேட்டுள்ளார். அதற்கு ராஷி கண்ணா எனக்கு ஒரு பாய் பிரண்ட்டும் கிடையாது. அப்படி அமையும் போது, நான் நிச்சயமாக சொல்வேன் என்று கூறியுள்ளார்.