அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் டீசர் நாளை வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் டீசர் நாளை வெளியீடு; படக்குழு அறிவிப்பு.!



Rasavathi Movie Teaser Out on 5 Jan 2023 

 

டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி தயாரிப்பில், தமன் இசையில், சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ரசவாதி (Rasavathi). சாந்தகுமாரின் இயக்கத்தில் வெளியான மௌனகுரு, மகாமுனி ஆகிய படங்கள் நல்ல வெற்றியை அடைந்தன. 

அதனைத்தொடர்ந்து, தற்போது ரசவாதி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ரம்யா சுப்பிரமணியன், ஜிஎம் சுந்தர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. அதனை உறுதி செய்யும்பொருட்டு, படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.