அட்ரா சக்க.. வேற லெவல்! தளபதியின் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் படைத்த சாதனை! உற்சாகத்துடன் கொண்டாடும் ரசிகர்கள்!!

அட்ரா சக்க.. வேற லெவல்! தளபதியின் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் படைத்த சாதனை! உற்சாகத்துடன் கொண்டாடும் ரசிகர்கள்!!


Ranjithame ranjithame movie cross 60million views in youtube

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தளபதியாக, ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து மாபெரும் பிரபலமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். அவரது படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் திருவிழாக்களைப் போல கொண்டாடுவர்.

இந்த நிலையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகிபாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.  வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் அண்மையில் வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டியை கிளப்பி செம ஹிட்டானது. அதாவது யூடியூபில் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் தற்போது 60 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனை மிகவும் உற்சாகத்துடன் படக்குழு ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.