இப்போ இவனா! பிரபல நடிகருடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.

இப்போ இவனா! பிரபல நடிகருடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.



Ranaa DD

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சிற்கும், நடவடிக்கைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. 

மேலும் அவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களையும் சந்தித்து பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து டிடி சமீபத்தில் பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய  கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார்.

Ranaa

இந்நிலையில் டிடி சில ஆண்டுகளாக விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் இருந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் எங்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் மூலம் மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் டிடி. 

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ராணாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தற்போது ராணாவுடனா என கேள்வி கேட்டு டிடி வெச்சு செய்துள்ளனர்.