ஆள் அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. வெளியான பாகுபலி நடிகரின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!rana latest photo leaked

கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் பெரும் வரவேற்பை பெற்ற படம் பாகுபலி. இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் ராணா. இவர் இப்படத்தில் தனது உடலை ஏற்றி கட்டுக் கோப்பான உடலமைப்புடன் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.

மேலும் கதாநாயகனாக நடித்த பிரபாசுக்கு சமமாக ராணாவிற்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.  இந்நிலையில் அவர் தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும், தோலுமாக உள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

rana

அவருக்கு உடம்பில் எதுவும் பிரச்சினையோ எனவும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் ராணா ரசிகர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளார்.

நடிகர் ராணா வேணு உடுகுலா இயக்கிவரும் விரத பர்வதம் 1992 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தில் ராணாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.

rana

 மேலும் காதல் மற்றும் ஆக்சன் கலந்த இப்படத்திற்காகவே  ராணா இவ்வாறு உடல் எடையை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ஒரு படத்திற்காக தனது உடல் எடையை அதிக அளவில் குறைத்து அடையாளமே தெரியாமல் மாறிப்போன ராணாவின்  அர்ப்பணிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.