பாகுபலி வில்லன் நடிகருக்கு, காதலியுடன் நிச்சயதார்த்தம்! இணையத்தை கலக்கும் அழகிய புகைப்படங்கள்! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

பாகுபலி வில்லன் நடிகருக்கு, காதலியுடன் நிச்சயதார்த்தம்! இணையத்தை கலக்கும் அழகிய புகைப்படங்கள்!

பாகுபலி படத்தில் பல்லால்தேவனாக, வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ராணா. இவர் இப்படத்தில் தனது உடலை ஏற்றி கட்டுக் கோப்பான உடலமைப்புடன் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ். தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளங்களை பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ராணா தனது காதலி மிஹீகாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு . தன்னுடைய காதலுக்கு அவர் ஓகே சொல்லிவிட்டதாக கூறியிருந்தார். மிஹீகா பஜாஜ் ஐதராபாத்தை சேர்ந்தவர். இவர் ஆடை, பர்ஸ், வடிவமைப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.மாடலிங் தொழிலும் செய்து வருகிறார். 

 இந்நிலையில் ராணா மற்றும் மிஹிகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.அதனைத் தொடர்ந்து நடிகர் ராணா,  காதலியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இவர்களது திருமணம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராணா- மீஹிகா ஜோடி க்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo