நடிகை சித்ராவின் மரணம் குறித்து முதன்முதலாக பேசிய பிக்பாஸ் பிரபலம்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!

நடிகை சித்ராவின் மரணம் குறித்து முதன்முதலாக பேசிய பிக்பாஸ் பிரபலம்! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!


ramya pandian talk about chitra suicide

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து, பின்னர் தனது திறமையால் முன்னேறி ஏராளமான சீரியல்களில் நடித்து, மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விஜே சித்ரா. அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த தொடரில் நடித்ததை தொடர்ந்து இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

 இந்த நிலையில் சித்ராவிற்கு கடந்த ஆண்டு ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் இருவருக்கும் வரும் பிப்ரவரி  மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

   ramya pandian

இந்நிலையில் சித்ராவின் மறைவு குறித்து அறிந்த நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான ரம்யா பாண்டியன் மிகவும் கவலைப்பட்டுள்ளார். சமீபத்தில் ரம்யா இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.  அப்போது ரசிகர் ஒருவர் சித்ராவின் மரணம் குறித்து கேட்கையில், ரம்யா தனிப்பட்ட முறையில் எனக்கு சித்ராவை தெரியாது. அவரை நான் சந்தித்தது கிடையாது. ஆனால் இந்த விஷயத்தை கேட்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். எனது அம்மா அவரது சீரியலை விரும்பி பார்ப்பார்கள் எனக்கு வருத்தமாக உள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார். சித்ரா மரணத்தின்போது ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்தார்.