வெறித்தனம் வெறித்தனம்... ஜிம்மில் ரம்யா பாண்டியனின் ஒர்க் அவுட் வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்கள்... வீடியோ இதோ!!Ramya pandian latest workout video viral

தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து அவர் ஜோக்கர் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலமானார். பின்னர் அவர் ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து அவருக்கு பெருமளவில் படவாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதை கொள்ளை கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் பெருமளவில் பிரபலமான அவர் தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷீட் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வரும் ரம்யா பாண்டியன் தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: நடிகை ராசி கண்ணாவா இது... விருது விழாவிற்கு எப்படி வந்துள்ளார் என்று பாருங்கள்... புகைப்படம் இதோ!!

 

இதையும் படிங்க: Good Bad Ugly: குட் பேட் அக்லீ படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியீடு.!