சினிமா

நம்ம ரியோவிற்கு ஜோடியாக இந்த பிரபல நடிகையா? வெளியான தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்! யார் தெரியுமா?

Summary:

ramya nampeesan pair to rio

பிரபல மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி  தொகுப்பாளராக இருந்து,  தனது கலகலப்பான பேச்சாலும், செயலாலும் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் சரவணனாக நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். 

 அதனை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவிய ரியோ சத்ரியன் மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் தற்போது ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார். 

rio raj with ramya nampeesan க்கான பட முடிவு

அவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, ஆடுகளம் நரேன், லிவிங்ஸ்டன்,ரோபோ சங்கர், ரேகா, விஜி சந்திரசேகர், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பத்ரி வெங்கடேஷ் தயாரிக்கும் அந்த படம் முழுவதும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி வருகிறது


Advertisement