"பாகுபலி படத்தில் நடித்ததால் தான் எனக்கு இப்படியொரு நிலைமை" மனம் திறந்த ரம்யா கிருஷ்ணன்..

"பாகுபலி படத்தில் நடித்ததால் தான் எனக்கு இப்படியொரு நிலைமை" மனம் திறந்த ரம்யா கிருஷ்ணன்..



Ramya krishnan openup about reason for acting bahubali

1983ம் ஆண்டு தன் 15 வயதில் சினிமாவில் நடிக்க வந்தார் ரம்யா கிருஷ்ணன். 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன், இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முறையாக நடனப்பயிற்சி பெற்ற இவர பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

ramya

நடிகை ஸ்ரீதேவிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளிலும் வெற்றி பெற்ற ஒரே  நடிகை ரம்யா கிருஷ்ணன் தான். 30 வயதை தாண்டிய பிறகும் இன்றைய இளம் நடிகர்களுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்.

தமிழில் அம்மன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு, ரஜினியின் படையப்பா படத்தில் வில்லியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். சமீபத்தில் அவரளித்த பேட்டியில், "நான் நீண்ட நாட்களாக போராடியும் என்னால் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை. 

ramya

நான் நடித்த படங்கள் ஹிட்டானாலும் எனக்கு அடுத்த கட்டத்துக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று கூறினார். நீண்ட காலங்களுக்கு பிறகு 'பாகுபலி' படத்தில் ராஜமாதாவாக நடிப்பில் மிரட்டியிருந்தார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' படத்திலும் ரஜினிக்கு மனைவியாக நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.