சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்! உற்சாகத்தில் போட்டியாளர்கள்.

Summary:

Ramya Krishnan hosts bigg boss season 3 Telugu

பிக்பாஸ் சீசன் மூன்று தமிழில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அதேபோல் தெலுங்கிலும் சீசன் மூன்று தொடங்கி ஏறக்குறைய 42 நாட்கள் ஆகிவிட்டது. தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகை நாகர்ஜுனா தொகுத்து வழங்கிவருகிறார். இந்நிலையில் நடிகர் நாகர்ஜுனா தனது 60 வது பிறந்தநாளை கொண்டாட தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளார்.

இதனால் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்நிலையில் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகை ரம்யா கிருஷ்ணனை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஏற்பட்டு செய்துள்ளனர்.

இந்நிலையில் ராஜமாதா கெட்டப்பில் நடிகை ரம்யா கிருஷ்ணன் பிரமாண்டமாக என்ட்ரி கொடுத்து பார்வையாளர்களும், பிக்பாஸ் போட்டியாளர்களும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ரம்யா கிருஷ்ணனை பார்த்ததும் போட்டியாளர்கள் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். 


Advertisement