இவரா? வேட்டியை மடிச்சுகட்டி கோவிலை சுத்தம் செய்த பிரபல நடிகரை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்! வீடியோ உள்ளே.!

இவரா? வேட்டியை மடிச்சுகட்டி கோவிலை சுத்தம் செய்த பிரபல நடிகரை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்! வீடியோ உள்ளே.!


ramcharan-clean-sivan-temple-with-wife

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் போன்று தெலுங்கு சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவருக்கென தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

அவரைப் போலவே சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வருபவர் அவருடைய மகன் ராம் சரண். இவர் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.மேலும் தந்தையை போலவே இவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

temple

மேலும் தெலுங்கில் படமாக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மாவீரன், நாயக்,ரச்சா, ரங்கஸ்தலம் போன்ற பல படங்களின் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்களும் ஏராளம்.
ராம் சரண் உபாசனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் ராம்சரண் அவரது மனைவி உபாசனாவுடன் மகா சிவராத்திரியை முன்னிட்டு தனது  தாத்தா கட்டிய பழைய சிவன் கோயிலை சுத்தம் செய்துள்ளனர்.
அவ்வாறு ராம்சரண் பக்தி கலந்த அர்ப்பணிப்போடு கோவிலை சுத்தம் செய்யும் வீடியோவை உபாசனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் புகழ்பெற்ற மாபெரும் நடிகர் மிகவும் எளிமையாக கோவிலை சுத்தம் செய்வதை கண்டு வியந்து  பாராட்டி வருகின்றனர்.