துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்? ஆனால்?

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்? ஆனால்?


ramba-is-the-first-choise-for-vijais-thullatha-manamum

தளபதி விஜய்யின் வெற்றிப்படங்களில் ஓன்று துள்ளாத மனமும் துள்ளும். விஜய், சிம்ரன், மணிவண்ணன் என பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். படம் மாபெரும் வெற்றிபெற்றதோடு பாடல்களும் மாபெரும் வெற்றிபெற்றது. மேலும் இன்றுவரை இந்த படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் எழில். மனம்கொத்தி பறவை, தேசிங்கு ராஜா போன்ற தற்போதைய வெற்றிப்படங்களை இயக்கிய எழில் அவர்கள்தான் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் இயக்குனர்.

vijay

கேரளாவில் இந்த படம் விஜய்க்கு மிகப்பெரிய மார்க்கெட் கிடைக்க உதவியது என்றே கூறலாம். படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில் படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார் இயக்குனர் எழில்.

முதலில் படத்திற்கு ருக்மணிக்காக என்று தான் எழில் பெயர் வைத்தாராம். ஆனால் படத்தின் பெயர் தயாரிப்பாளருக்கு பிடிக்காததால் பின்னர் துள்ளாத மனமும் துள்ளும் என பெயர் வைத்துள்ளார் எழில்.

அதோடு இதில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது ரம்பா தானாம், கதையில் மாற்றம் வர அவருக்கு பதில் சிம்ரன் கமிட்டானாராம்.

vijay