தினேஷ் - ரக்ஷிதா ஜோடி பிரிய இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!

தினேஷ் - ரக்ஷிதா ஜோடி பிரிய இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!


Rakshita and Dinesh divorced for a reason

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் அதே டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடிக்கும்போது சக நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதில் திருமணமான அடுத்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து  வந்தனர்.இதில் நடிகை ரக்ஷிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.

Rakshita Dinesh

அதேபோல் நடிகர் தினேஷ் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் பிஸியாக நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தினேஷ்-ரக்ஷிதா ஜோடி பிரிந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

அதன்படி அளவுக்கு அதிகமாக கடன் தொல்லையால் தான் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாச்சியாபுரம் சீரியலை தினேஷ் தயாரித்து, ரக்ஷிதா உடன் சேர்ந்து நடித்திருந்தார்.

Rakshita Dinesh

ஆனால் இந்த சீரியல் திடீரென பாதியில் கைவிடப்பட்டதால் தினேஷ் கடனில் சிக்கியுள்ளார். இதில் கடன் கொடுத்தவர்கள் தினேஷ் மற்றும் அவரது மனைவி ரக்ஷிதா இருவர் மீதும் வழக்கு தொடுத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக அவருடைய நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.