ஹீரோவாக அறிமுகமான பாக்கியலட்சுமி ஈஸ்வரியின் ரியல் மகன்.. வைரலாகும் புகைப்படம்.!

ஹீரோவாக அறிமுகமான பாக்கியலட்சுமி ஈஸ்வரியின் ரியல் மகன்.. வைரலாகும் புகைப்படம்.!



Rajyalakshmi son picture

விஜய் டிவியின் பிரபல சீரியலான பாக்கியலட்சுமியில் ஹீரோயினாக இருப்பவர் நடிகை சுசித்ரா. இதில் அவருக்கு மாமியாராக ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ராஜ்யலட்சுமி. அவரது மகன் ரோஹித் தற்போது தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். 

Rajyalakshmi

அவருக்கு சீரியல் ரசிகர்களும், ராஜ்யலட்சுமியின் நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது மகனின் புகைப்படத்தை தெளிவாக நடக்கும் கம்பம் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.  ‘பல்லேகோட்டிக்கி பண்டகே’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தான் ரோஹித் ஹீரோவாக நடிக்கிறார். 

Rajyalakshmi

இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. அந்த பதிவில் மீனா, "படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். சீக்கிரம் தமிழுக்கும் வாங்க தம்பி."என்று தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.