என்னது.. பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் ராஜு - பிரியங்கா போட்டியாளர்களா?? உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்!!

என்னது.. பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் ராஜு - பிரியங்கா போட்டியாளர்களா?? உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்!!



raju-and-priyanga-is-a-anchor-in-bigboss-jodigal-season

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஐந்து சீசன்கள் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் முதல் நான்கு சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஷிவானி -சோம்சேகர், கேப்ரில்லா – ஆஜித், வனிதா -சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத் – ஷாரிக், அறந்தாங்கி நிஷா – தாடி பாலாஜி, சம்யுக்தா – ஜித்தன் ரமேஷ், பாத்திமாபாபு – மோகன் வைத்யா, ஜூலி – சென்ராயன் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களில் ஷாரிக் மற்றும் அனிதா சம்பத் தங்களது நடன திறமையால் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் 2 நடைபெற உள்ளது. இதுகுறித்த ப்ரமோவும் வெளியானது. அதில் பிரியங்கா- ராஜு, ஐக்கி பெரி-தேவ், இசைவாணி- வேல்முருகன், அபிஷேக்- ஸ்ருதி, கணேஷ்கர்- ஆர்த்தி, அமீர்- பாவனி , சுஜா வருணி- சிவகுமார், பார்த்தசாரதி- தாமரை ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் ராஜு – பிரியங்கா போட்டியாளர்களா? அல்லது தொகுப்பபாளர்களா? எனக் கேள்வி எழுந்தது.

Bigboss jodigal

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து ராஜு தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் தான் தொகுப்பாளர் எனவும், எனக்கு உங்களது ஆதரவை அளியுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.