லீக்கானது புகைப்படம்.. ஜெயிலர் படத்தில் ரஜினியின் தோற்றம்!! வைரல் புகைப்படம் இதோ..

லீக்கானது புகைப்படம்.. ஜெயிலர் படத்தில் ரஜினியின் தோற்றம்!! வைரல் புகைப்படம் இதோ..


Rajinis jailer movie shooting spot photos leaked

ரஜினி நடித்துவரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் ஜெயிலர். ரஜினியின் 169-வது படமானா ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். 

மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன்,  கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Jaier