வாழ்நாள் சாதனையாளர் விருது! மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த் - TamilSpark
TamilSpark Logo
சினிமா

வாழ்நாள் சாதனையாளர் விருது! மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக தலைசிறந்த நடிகராக திகழந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 68 வயதாகும் ரஜினி இதுவரை 166 படங்களில் நடித்துள்ளார். 

பேட்ட படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்த இவர் உலக அளவில் பிரபலமானவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

 

உலகெங்கும் ரஜினிக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தனது நடிப்பால் பலரின் மனதை கொள்ளை கொண்ட ரஜினி பத்மபூசன், பத்மவிபூசன், கலைமாமனி என பல விருதுகளை பெற்றுள்ளார். 

தற்போது ரஜினியை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசு இவருக்கு வாழ்நாள் சசாதனையாளர் விருதை அறிவித்துள்ளது. இதற்கு ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo