புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"அப்பாவுக்கு உடம்பு சரியில்லை" - ரஜினி ரசிகர் கோரிக்கை.!
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் அடையாளமாகவும், அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் இருந்து வந்தார். இன்றளவும் அவருக்கான ரசிகர் பட்டாளம் என்பது இருந்தாலும், அரசியல் எதிர்பார்ப்பு, விலகல் என மாறுபட்ட கருத்து சூழலால் சில அதிருப்திகளும் உண்டாகியது.
விரைவில் கூலி ரிலீஸ்
எனினும், ரஜினிக்கான வரவேற்பு என்பது குறையாமல் தொடருவதால், அவரின் படங்கள் வெளியாகும்போது பழைய பாணியில் திருவிழா போல கொண்டாடப்பட்டு, வசூல் வேட்டையிலும் சாதனை படைக்கிறது. மதுரையில் ரஜினியின் ரசிகர் சார்பில் கோவிலும் கட்டப்பட்டு இருக்கிறது. விரைவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: வேட்டையன் வெற்றி விழா; தனது கைகளால் உணவு வழங்கிய நடிகை ரித்திகா சிங்.!
ரசிகர் கோரிக்கை
இந்நிலையில், கோவையில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் இளங்கோ. இவரின் தந்தை தீவிர ரஜினி வெறியர் ஆவார். தற்போது வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவை எய்தி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
அவர் விரைந்து குணமடைய வேண்டும் என குடும்பத்தினர் எதிர்பார்க்கும் நிலையில், அவரின் மகன் இளங்கோ எக்ஸ் (ட்விட்டர்) வாயிலாக, ரஜினிகாந்த் தனது ரசிகர்கருக்காக ஒரேயொரு குணமடைய வாழ்த்துச்சொல்லி பதிவை அனுப்பினால், தந்தை நலம்பெறுவார் என கூறியுள்ளார்.
@kavalan_rajini @OnlineRajiniFC @rajinifans @RajiniFansDE @RajiniFansNo @RajiniFans24x7 @Rajinifanstrend @ThalaivarFansKL @thalaivarfans @bksri108hot @anantharajsri @annathe007 @Arun11273797 @bksri108hot @cbe_pasanga @dgnanapandithan @Jegadeeshbabu82 @kavalan_rajini @mahalaingam
— Elango V (@rajinielango) November 1, 2024
ரசிகரின் கோரிக்கை ரஜினி வரை சென்றடையுமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: வேட்டையன் படத்தில் டெலீட் செய்யப்பட்ட ரஜினி - பகத் பாசில் காட்சிகள்; வீடியோ உள்ளே.!