சினிமா

இதுதான் அடுத்த ரஜினி படத்தின் புது கெட்டப்பா? அடேங்கப்பா! பயங்கரமா இருக்கே!

Summary:

Rajinikanth 166 fan poster goes viral

பேட்ட படத்தை அடுத்து AR முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. பேட்ட படம் மாபெரும் வெற்றிபெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. தற்போது AR முருகதாஸுடன் இணைந்துள்ளார் ரஜினி. ரஜினி மகளின் இரண்டாவது திருமணம் இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள நிலையில், அவரது திருமணத்திற்கு பிறகு படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி என மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் முருகதாஸ் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் AR முருகதாஸ் ஏற்கனவே ஒரு கதையை ரஜினியிடம் கூறியதாகவும், அந்த கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை, வேறு கதை தயார் செய்யுமாறு ரஜினி முருகதாஸிடம் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் முருகதாஸ் வேறு கதை தயார் செய்து ரஜினியிடம் கொடுத்ததாகவும், அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் பேசப்பட்டது.

மேலும் அந்த படத்திற்கு நாற்காலி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவின. ஆனால், அவை அனைத்தும் பொய் என முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தின் போஸ்டர் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

வாயில் பீடியுடன், தாடியுடன் பயங்கர கெத்தாக, மாஸாக உள்ள அந்த புகைப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. ஆனால், இது உண்மையான போஸ்டர் இல்லை என்றும், ரஜினி ரசிகர் யாரோ ஒருவர் உருவாக்கியது எனவும் கூறப்படுகிறது.

 


Advertisement