"அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்" பத்திரிகையாளர்களிடம் கோபப்பட்ட ரஜினிகாந்த்.!?

"அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்" பத்திரிகையாளர்களிடம் கோபப்பட்ட ரஜினிகாந்த்.!?



Rajinikandh angry talk about political questions

தமிழ் திரை துறையில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். 80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து திரை துறையில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டியிருக்கிறார்.

rajini

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவில் பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றன. அந்த அளவிற்கு தனது நடிப்புத் திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.

இதன் பிறகு தன் மகளின் இயக்கத்தில் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். லைகா தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தில் அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.

rajini

இது போன்ற நிலையில் படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம், பத்திரிக்கையாளர்கள் சினிமாவை குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்தார். ஆனால் அரசியலை குறித்து கேள்வி கேட்டபோது "அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள்" என்று கோவத்துடன் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.