சினிமா

அவமானப்படுத்திய பிரபல தயாரிப்பாளர்!! முதல் முறையாக பல வருடங்கள் முன்பு நடந்த சம்பவத்தை கூறிய ரஜினிகாந்த்!!

Summary:

Rajini talks about his experience in tamil cinema

இன்று உலக அளவில் பிரளமான நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது  தர்பார் படத்தில் பிசியாக நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய ரஜினிகாந்த் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தன்னை அசிங்கப்படுத்திய சம்பவம் பற்றி முதல் முறையாக பேசியுள்ளார்.

ரஜினி சினிமாவில் அறிமுகமாகி 4 அல்லது 5 படங்கள் மட்டுமே நடித்திருந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படத்தில் நடிக்க கூறி ரஜினியிடம் கேட்டாராம். அதற்கு ரஜினியும் சம்மதம் தெரிவித்து படத்திற்காக 1000 ரூபாய் முன்பணம் கேட்டாராம்.

தற்போது தன்னிடம் பணம் இல்லை, நாளை ஷூட்டிங் வரும்போது தருவதாக அந்த தயாரிப்பாளர் கூறினாராம், ஷூட்டிங் சென்றபிறகும் பணம் வரவில்லையாம், போன் செய்து கேட்டதற்கு மேக்கப் போடுங்கள் மேக்கப் போட்டபிறகு தருவதாக கூறினாராம்.

இல்லை, பணம் கொடுத்தால்தான் மேக்கப் போடுவேன் என ரஜினி கூறினாராம். அங்கு வந்த தயாரிப்பாளர் என்னை மோசமாக திட்டி உனக்கு படத்தில் கேரக்ட்டர் இல்லை, வெளியே போ என கூறினாராம். போகிறேன், கார் அனுப்புங்கள் என கேட்டதற்கு, 'நீ நடந்துபோ' என கூறிவிட்டாராம்.

அதன்பிறகு கடினமாக உழைத்து, முன்னேறி கார் வாங்கி அதே ஸ்டுடியோவில் கொண்டு சென்று நிறுத்தியதாக ரஜினி கூறியுள்ளார்.


Advertisement