சினிமா

நரகத்தில் வாழ்வதாக கதறிய நடிகை!! நடிகர் ரஜினி செய்த காரியத்தை பார்த்தீர்களா!! வீடியோ உள்ளே!

Summary:

rajini talk with actress vijayalakshmi to help

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி ஏராளமான கன்னட சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில காலங்களுக்கு விஜயலக்ஷ்மி மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மிகவும் கஷ்டப்படுவதாகவும் மருத்துவமனைக்கு செலுத்தக்கூட பணம் இல்லை எனவும் அப்பொழுதே விஜயலட்சுமியின் சகோதரி உதவி கேட்டிருந்தார்.

actress vijayalakshmi க்கான பட முடிவு

அதனைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு கோரிக்கை விடுத்து விஜயலக்ஷ்மி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தான் அழிந்து போகவேண்டும் என பலரும் நினைப்பதாகவும், தான் நரகத்தில் வாழ்ந்து வருவதாகவும் கண்கலங்கி இருந்தார். மேலும் தனது சகோதரி மற்றும் தாயாருக்கு தங்கள்தான் உதவி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினி சார் என்னிடம் போனில் பேசினார். என்னுடைய பிரச்சினைகளை மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் கேட்டார். மேலும் அனைத்து பிரச்சினைகளையும் தான் சரிசெய்வதாகவும், மன உளைச்சல் இல்லாமல் இருக்குமாறும் அன்போடு ஆறுதல் கூறினார. தான் மட்டுமின்றி பிறரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற சிறந்த மனிதநேயம் கொண்டவர் அவர் என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement