இதுல அப்படி என்ன இருக்குனு தோணுச்சு..விஸ்வாசம் குறித்து நடிகர் ரஜினி கூறியதை பார்த்தீங்களா!! வைரலாகும் ஆடியோ!!rajini-talk-about-viswasam-movie

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் விஸ்வாசம். இப்படம் அனைத்து வயதினராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது விஸ்வாசம் படம் பார்த்த அனுபவத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹுட் செயலியின் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறியதாவது, பேட்ட திரைப்படம் வெளியான அன்றே, சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது. இரண்டு படமுமே சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் மாபெரும் வெற்றிபெற்ற விஸ்வாசம் திரைப்படத்தை பார்க்க வேண்டும்னு தோணுச்சு. இதுகுறித்து தயாரிப்பாளர் தியாகராஜனிடம் கேட்டு படமும் பார்ப்பேன். இடைவேளை வரை படம் நன்றாகதான் இருந்தது. 

ஆனால் இவ்வளவு பெரிய சூப்பர் ஹிட் ஆக படத்தில் என்ன இருக்கிறது என தோன்றியது. ஆனால் போக போக கிளைமாக்ஸில் படத்தின் கலரே மாறியது. ரொம்ப சிறப்பாக இருந்தது. எனக்கு தெரியாமலேயே கை தட்டினேன். தியாகராஜனுக்கு வாழ்த்து கூறினேன். பின்னர் இயக்குனர் சிவாவை சந்தித்தேன் என கூறியுள்ளார்.

நடிகர் ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும் வசூல் ரீதியாக நல்ல சாதனை படைத்தது.