சினிமா

உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா. தைரியமாக இருங்க! சிகிச்சை பெற்றுவரும் தனது ரசிகனுக்காக ரஜினி வெளியிட்ட எமோஷனல் ஆடியோ!

Summary:

Rajini send audio to his fan who got treatment in hospital

தமிழகத்தை சேர்ந்தவர் முரளி. இவர் மும்பையில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு சிறுநீரக பாதிப்பும் இருந்துள்ளது. இந்நிலையில் உயிர் பிழைக்க மாட்டோமோ என்ற அச்சத்தில் முரளி ரஜினிக்காக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,  தலைவா என் இறுதி ஆசை, 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலையை உருவாக்கி கொடு. உங்களை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்தான் உள்ளது என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ரஜினியின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து அவர் முரளிக்காக ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நான் ரஜினி பேசுகிறேன். உனக்கு ஒன்றும் ஆகாது கண்ணா. தைரியமாக இருங்கள். நான் உங்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.நீங்கள் சீக்கிரம் குணமடைந்துவிடுவீர்கள். 

குணமடைந்த பிறகு குடும்பத்தோடு எனது வீட்டிற்கு வாருங்கள். தைரியமாக இருங்கள். ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் இந்த ஆடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் முரளி குணமடைந்து விட்டதாகவும், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement