யாரும் எதிர்பாராத மாஸ் கூட்டணியில் நடிக்கவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி! யார் கூட்டணியில் தெரியுமா?

யாரும் எதிர்பாராத மாஸ் கூட்டணியில் நடிக்கவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி! யார் கூட்டணியில் தெரியுமா?


Rajini next movie is young director lokesh kanagaraj

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இதுவரை 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். இவருக்கு என்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ரஜினி அவர்கள் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

lokesh kanagarajஇந்நிலையில் தற்போது அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் தயாரிப்பாளர் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளி வந்துள்ளது. 

அதுமட்டுமின்றி தற்போது லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.